Followers

30 July, 2014

"தமிழர்களின் வீரமரபு ஜல்லிக்கட்டில் மருத நில மள்ளர் குடியினர்"

சீறுகின்ற காளை…
அதை அடக்குகின்ற வேளை…

தமிழர்களை மகிழ்விக்கக்
கூடிய பண்டிகைகளில்
இன்றியமையாதவை உழவர்
திருநாளும், சித்திரைத்
திருநாளும். ஆண்டில் ஒரு நாள்
கொண்டாடக் கூடிய விடயம்
பண்டிகை என நம் அனைவருக்கும்
தெரியும். மாதம் முழுவதும்
கொண்டாடப்படும் விடயம்
என்னவென்று தெரியுமா…?
ஏறு தழுவுதல் எனப்படும்
ஜல்லிக்கட்டு தான் அது. தைத்
திங்கள் முழுவதும்
பல்வேறு இடங்களில்
பல்வேறு முறைகளில்
கொண்டாடப்படுகிறது. இந்த
ஜல்லிக்கட்டு வேண்டுமா வேண்டாமா என்பதை இறுதியில்
அலசுவோம்.
ஜல்லிக்கட்டு – பெயர்க்
காரணம் :
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை,
“சல்லி காசு” எனப்படும்
நாணயங்கள் உபயோகத்தில்
இருந்தன. இந்த
நாணயங்களை காளையின்
கொம்பில், ஒரு துணியில்
போட்டு கட்டி விடுவார்கள்.
இதைத் தான்
“சல்லி கட்டு”என்றழைத்தனர்.
இந்த சல்லி கட்டு போட்டியின்
முடிவில் வெல்லும்
வீரருக்குச் சொந்தமாகும். ”
சல்லி கட்டு”
என்பதே மருவி பின்னாளில் ”
ஜல்லிக்கட்டு” என்றானது.
தோற்றம் :
சிலம்பில் ஏறு தழுவுதல்
பற்றிய குறிப்புகள் காணக்
கிடைப்பதால், இவ்வீர
விளையாட்டுஇரண்டாம்
நூற்றாண்டு அல்லது அதற்குமுன்னரே தோன்றியிருக்கலா
ம் என்பது நம் கருத்து.
பாண்டியர்களின் ஆட்சிக்
காலத்தில், அதாவது மூன்றாம்
நூற்றாண்டிலிருந்தே இந்த
ஜல்லிக்கட்டு இருந்து வந்திருக்கிறது.
பாண்டியர்களின்
நாள்காட்டியில் இந்த
விழா பற்றிய
குறிப்பு உருவாக்கப்பட்டு
ள்ளது. ஏறு தழுவுதலை தேசிய
விளையாட்டாகக் கொண்ட
ஸ்பெயின் நாட்டில் கூட 15ஆம்
நூற்றாண்டிலிருந்துதான் “Bull
Bitting” என்ற பெயரால்
குறிக்கப்பட்டு இவ்விழா தொடர்ந்து நடத்தப்படுகிறது
என்பது இவ்விடத்தில்
குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டு – வகைகள் :
ஜல்லிகட்டில் இரண்டு வகைகள்
உள்ளன. வாடிவாசல்,
வெளிவிரட்டு என்பன
அவ்விரண்டு வகைகள்.
முன்னதில் மாடுகள்
ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல்
வழியாக திறந்துவிடப்படு
கின்றன.
பின்னது வெளிவிரட்டு எனப்படும்
திறந்தவெளியில் மாடுகள்
அவிழ்த்துவிடப்படுவது.
பின்னதில் மாடு எந்தப்
பக்கம் இருந்து வரும், யாரைத்
தூக்கும் என்று தெரியாது.
அந்த இடம்
ஒரு யுத்தகளத்தைஒத்த
ிருக்கும்.
சிறுவயல், பலவான்குடி,
திருப்பத்தூர், வேந்தன்பட்டி,
ஆத்தங்குடி, வெளுவூர்
என்று மதுரை சிவகங்கை புதுக்கோட்டை பகுதிகளில்
நடைபெறும் ஜல்லிகட்டுகள்
வெளிவிரட்டு வகையைச்
சேர்ந்தவை.
ஜல்லிக்கட்டு – என்ன?
எப்படி? :
இந்த ஜல்லிக்கட்டுக்க
ு காளைகளை தயார்படுத்துவதே
ஒரு தனிக்கலை எனலாம். இந்தக்
காளைகள் எந்த வேலையும்
செய்வதில்லை.
இவற்றிற்கு பச்சரிசி மாவும்,
நவதானியங்களும் உண்ணக்
கொடுக்கப்படுகின்றன. மேலும்,
இந்தக் காளைகள் சற்றேறக்
குறைய வளர்ப்பவரின்
குணத்தைக் கொண்டிருக்கும்.
இந்த ஜல்லிக்கட்டுக் காளைகள்
விளையாட்டு நேரம் தவிர மற்ற
நேரங்களில் சாதுவாகவேஇருக்க
ின்றன. அதாவது,
இவற்றிற்கு இது விளையாட்டு என்பது தெரிந்தே இருக்கிறது.
மேலும்,
விளையாட்டினூடே மாடு நுரை தள்ளிவிட்டால்
உடனே விளையாட்டைநிறுத
்தும்படியாக
அறிவிப்பு வந்துவிடுகிறது.
அது போல அந்த மாடுகளைப்
பிடிக்க முயற்சிக்கின்றவ
ர்கள் பரிசுப்பணத்தின்
காரணமாக போட்டியில்
கலந்து கொள்வதில்லை.
அது தரும் சாகச
உணர்வையேபெரிதாக
நினைக்கிறார்கள்.