Followers

11 December, 2011

indira vizha

இந்திர விழா ஒவ்வொரு ஆண்டும் நேபாளத்தில் ஆங்கில மாதம் செப்டம்பர் வாக்கில் எட்டு நாட்கள் விமர்சையாக கொண்டாடப் படுகிறது.
அதில் கீழ் கண்ட தேர்கள் செய்து ஊர்வலம் வரும்
• Majipa Lakhey
• Pulukishi
• Sawan Bhaku
• Ganesh (Chariot)
• Kumar (Chariot)
• Kumari (Chariot)
எட்டு நாட்கள் நடக்கும் நடக்கும் இந்திர விழாவில் மேற்கண்ட தேர் ஊர்வலம் நடக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேர். இதில் இந்திரனும், குமார் (குமரன்), குமரி (கன்னி) ஆகியவை தொல்குடி தமிழர்களோடு தொடர்பு கொண்டவை. இவை சங்க காலத்திற்கு முன்பே பயன்பாட்டில் உள்ளது. அதனால் தான் இந்திர விழா தமிழ் மன்னர்கள் கொண்டாடினார்கள்.
இந்திரவிழாவின் முக்கிய நோக்கமே மழை வேண்டி மழைக்கடவுளான இந்திரனுக்கு விழா எடுத்து வணங்கி மழையைப் பெறுவதாகும். மழை பெய்தால் விவசாயம் சிறக்கும், உணவு உற்பத்தி பெருகும், மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வர்
சங்க காலத்திலேயே இந்திர வணக்கமும் அவனுக்கு விழா எடுக்கும் வழக்கமும் தமிழர்கள் மத்தியில் இந்திருக்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை காலத்தில் இவ்வழக்கம் ஆழ வேரூன்றியிருந்தது.
தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன் என்ற சோழ மன்னன் இதை தொடங்கினான். சிலம்பு, மணிமேகலை காலங்களில் இவ்விழா அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக்கொடி ஏற்றப்பட்டது. பல தெய்வங்களுக்கும் பூசையிடப்பட்டு, இசையும் கூத்தும் கலந்து மக்கட்கு இன்பமூட்டின. அறிஞர்கள் குழுமியிருந்து பட்டி மண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவருக்கும் செற்றமும் கலகமும் செய்யாது ஒற்றுமையாய் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்விதத்தில் இவ்விழா சமய ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாக இருந்தது என அறியலாம்.

No comments:

Post a Comment